Reviving Our Water Bodies: ExNoRa’s Comprehensive Approach to Water Body Rejuvenation and Community Engagement

Water is the lifeblood of our planet, and healthy water bodies play a vital role in supporting ecosystems, economies, and communities. Unfortunately, many lakes, ponds, rivers, and other water bodies worldwide are facing degradation due to pollution, encroachment, and negligence. To address this growing crisis, ExNoRa International has developed a comprehensive approach to water body…

மரக்கன்றை முதல் முதலாக இன்று தொடுகிறேன் எனச் சொல்லிக்கொள்ளும் தலைமுறை இது😔

சமூகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளை காட்டிலும், முதல் முறையாக மரக்கன்றை  தொடுவதாக சொல்லும் இளம்  தலைமுறையினர் ஏராளம்.  பிக் பாஸ்கெட் ,மில்க் பாஸ்கட் என காய்கறிகளை கை தொடாமல் சமையலறைக்கு கொண்டு சேர்க்கும் வணிக முன்னேற்றத்தினால் மண், மரம், செடி, காய், பழம் என தொட்டு உணரும் கல்வி இத் தலைமுறைக்கு எட்டாக்கனியாக மாறி நிற்கிறது.  நகர்ப்புறங்களில் உயர்தட்டு மக்கள் மட்டுமல்ல நடுத்தர மக்களிடமும் இது பரவி,  பூச்சி இல்லாத காய்கறிகள், மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள்,பல முறை…

பசுமைக்குழுவின் நேரடி மாதாந்திர சந்திப்பு

பசுமைக்குழுவின் நேரடி மாதாந்திர சந்திப்பு  பசுமைக்குழுவின்  நேரடி மாதாந்திர சந்திப்பு  மேற்கு முகப்பேர் டால்பின் அகாடமியில்   20-02-2022 மாலை 4  மணிக்கு நடைபெற்றது. பசுமைகுழுவின் ஆயிரம் நாள் பயணத்தில் மீதம் ஓராண்டு உள்ளது.  நாம் இதுவரை பெற்ற அனுபவத்தில் இருந்து மீதம் உள்ள  நாட்களில் மேம்படுத்திய களப்பணி நாட்களாக மாற்ற இக்கூடுகை உதவியாக இருந்தது டன் பல்வேறு நம்பிக்கைகளை விதைத்தது.   தன்னார்வலர்களைக்கொண்ட பசுமைகுழு பொறுப்பேற்றல் எனும் சக்தியின் மூலம் ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது.  இங்கு வயது,செல்வாக்கு,பதவி, கல்வி என…

 அன்பிற்கு கிடைத்த அலங்காரம் 

சேலம் அருகே உள்ள வாழப்பாடியில், 100 சதுர அடியில் அமைந்த அழகான வீட்டில் வாழும் சமூக செயற்பாட்டாளர் முத்தமிழ் எனும்  26 வயது மங்கையின் திருமணத்திற்கு வாழ்த்திட பல மாவட்டங்களிலிருந்து குவிந்த சமூக ஆர்வலர்கள்👌🏻 15 வயது முதல் 70 வயது வரை உள்ளோர்  இந்நிகழ்வில் பங்கேற்று அக்கா, தங்கை , மகள் என உறவு கொண்டாடி மணமகள் முத்தமிழின் பண்புகளை விளக்கியபோது, உண்மை மற்றும் அக்கறையானது  அன்பின் முழுமையாக அனைவரையும் கட்டிப் போடுகிறது எனபதனை உணர்த்திற்று….

ஈகையின் ஊற்றாய் மாறி நிற்கும்‌ ஜார்ஜ் ஐயா

ஆம் பசுமை ஜோதியின் குடியிருப்பை பார்வையாடுகிறார். எலிகளுக்கு நடுவே குழந்தைகள் உறங்குவதை கண்டு  உறங்காத தன் ஈகை குணத்தால் மறுநாளே ஜோதியை அழைத்து சென்று அவர் விரும்பும் கட்டில் ஒன்றை எதிர்பாராத விதமாய் பரிசளிக்கிறார்.  சமூகத்திற்காக உண்மையுடன் வாழ்பவர்களை சமூகம் காக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணமாம் . தேவையறிந்து உதவுவதில் சிலர் கைதேர்ந்தவர்கள். அதில் ஜார்ஜ் அவர்களும் ஒருவர். பசுமைக்குழுவின் தன்னலமற்ற  செயல்பாடுகளால் பலரின் வாழ்வில் நம்பிக்கை பிறக்கின்றது எனறால் அது மிகையல்ல. உங்களின் இப்பண்பு…

படங்கள் மூலம் பாடம் சொல்லும் பாலங்கள்- எக்ஸ்னோரா

பண்பாடு, கலாச்சாரம்,அரசின் திட்டங்கள்,பண்டைய நாகரிகங்கள்,சிறு தொழில் மற்றும் இயற்கை காட்சிகளுடன் பாலங்கள் பாதசாரிகள்,வாகன ஓட்டிகளுடன் பேசுகின்றன.    சிங்காரச்சென்னை திட்டத்தில் மாநகராட்சியுடன் கைகோர்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பான எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பல்வேறு பாலங்களை வண்ண ஓவியங்களால் மாநகரம் முழுவதும் நிரப்பி வருகிறது.  இதன் மூலம் அவசரங்களில் இருந்து மன அழுத்தம் குறைந்து மனம் பரவசமடைகிறது. பொது சொத்துகளில் சுவரொட்டிகள் இன்றி  இதுபோன்ற  திட்டங்களை ஊக்குவிக்கும் சென்னை மாநாகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களை வியாபாரிகள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்…

இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் எய்மா பங்களிப்பில் உருவான 8 மாத அடர் வன அனுபவம் உரை

மரங்கள் தரும் மகிழ்ச்சி மகத்தானது, அதிலும் நாம் வைத்த மரம் வளர்ந்து நிற்கையில் அது தரும் ஆயிரம் சந்தோஷங்கள் மாற்றம் ஒன்றே மாறாதது  மாற்றம் நம்மில் இருந்தே துவங்கட்டும் அம்பத்தூர் சிட்கோ அலுவலகத்தில் குறைந்த வெப்பநிலை  வாருங்கள் பார்ப்போம்.

கார்பன் சமநிலை

இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி பங்களிப்பின் மூலம் கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி கட்டமைப்பு என பல துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக கார்பன் சமநிலை சார்ந்த  சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது  அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அடர்வனம், சுவரோவியம் என பல திட்டங்களை ஏற்கனவே நிறைவேற்றியதுடன்  அடுத்தகட்டமாக இன்று 16 –…