சேலம் அருகே உள்ள வாழப்பாடியில், 100 சதுர அடியில் அமைந்த அழகான வீட்டில் வாழும் சமூக செயற்பாட்டாளர் முத்தமிழ் எனும் 26 வயது மங்கையின் திருமணத்திற்கு வாழ்த்திட பல மாவட்டங்களிலிருந்து குவிந்த சமூக ஆர்வலர்கள்👌🏻
15 வயது முதல் 70 வயது வரை உள்ளோர் இந்நிகழ்வில் பங்கேற்று அக்கா, தங்கை , மகள் என உறவு கொண்டாடி மணமகள் முத்தமிழின் பண்புகளை விளக்கியபோது, உண்மை மற்றும் அக்கறையானது அன்பின் முழுமையாக அனைவரையும் கட்டிப் போடுகிறது எனபதனை உணர்த்திற்று.
சிறுவயது முதலே தன் குடும்பத்தில் தாம் பெற்ற வலிகளால் வளர்ந்த அந்த மங்கை குறிப்பாக கோவிட் காலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து நோயால் பாதிக்கப்பட்டவருக்கு street lights எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இரவு – பகலாக சேவையாற்றிய பாங்கு அனைவரின் நெஞ்சிலும் ஆழமாய் வாழ்கின்றது என்றால் அது மிகையல்ல.
அறிவால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்க முடியும் என அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் இவர் ஜெகதீஸ்வரன் எனும் கட்டிட பொறியாளரை கரம் பிடித்து பொது வாழ்க்கை என்பது இனி இல்லற வாழ்வோடு இனிதே தொடரும் என்று தனித்துவமாய் வாழச்செல்கின்றார்
சமூகத்தில் பல அமைப்புகளோடு இணைந்து செயலாற்றி அவர்தம் இல்லத்திலும்,உள்ளத்திலும் வாழும் இவ்விளம் பெண்ணாளுமை செல்லப்பிள்ளையாக கொண்டாடப்படுகின்றார்.
தன்னலமற்ற பொறுப்பேற்றல் என்று வாழ்வதால் குக்கிராமத்தில் இருந்த இவர் இன்று குன்றின் மீது வைத்து இச்சமூகம் அழகு பார்க்கிறது.நாம் இவரை வாழ்க வளத்துடன் என வாழ்த்தி மகிழ்வோம்🙌🏻
தன்னலமற்ற பொறுப்பேற்றலில் தான் அன்பும், அக்கறையும் மலர்கிறது
சமூகத்தின் அவலங்கள் அனைத்தும் சுயநல பார்வையோடு கடந்து செல்வதால் இன்றும் தொடர்கிறது.
சமூகத்தின் மீதான அன்பினால் மட்டுமே இப்பூவுலக நண்பர்களாக நம்மை இப்பிரபஞ்சம் அங்கீகாரம் செய்து அடையாளம் காட்டுகிறது
🌎உலகம் ஒரே குடும்பம்,
💚உலகம் அனைத்து உயிர்களுக்குமானது,
💓சமூகமாய் இணைந்து இருப்போம்🌴