பசுமை,தூய்மையுடன் அழகு திட்டங்களையும் செயல்படுத்துவதில் எக்ஸ்னோரா பெருமிதம் கொள்கிறது.
பண்பாடு, கலாச்சாரம்,அரசின் திட்டங்கள்,பண்டைய நாகரிகங்கள்,சிறு தொழில் மற்றும் இயற்கை காட்சிகளுடன் பாலங்கள் பாதசாரிகள்,வாகன ஓட்டிகளுடன் பேசுகின்றன.
சிங்காரச்சென்னை திட்டத்தில் மாநகராட்சியுடன் கைகோர்க்கும் சுற்றுச்சூழல் அமைப்பான எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பல்வேறு பாலங்களை வண்ண ஓவியங்களால் மாநகரம் முழுவதும் நிரப்பி வருகிறது.
இதன் மூலம் அவசரங்களில் இருந்து மன அழுத்தம் குறைந்து மனம் பரவசமடைகிறது.
பொது சொத்துகளில் சுவரொட்டிகள் இன்றி இதுபோன்ற திட்டங்களை ஊக்குவிக்கும் சென்னை மாநாகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அவர்களை வியாபாரிகள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
குறிப்பாக கிளாசிக் போலோ பங்களிப்பில் தி நகர் சவுத் உஸ்மான் ரோடு மேம்பாலத்தில் வரைந்துள்ள ஓவியங்கள் முன்னுதாரண திட்டமாக அனைவரின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
பசுமை,தூய்மையுடன் அழகு திட்டங்களையும் செயல்படுத்துவதில் எக்ஸ்னோரா பெருமிதம் கொள்கிறது.