Exnora

இந்தியன் ஆயில் நிறுவனம் நாடு முழுவதும் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி பங்களிப்பின் மூலம் கல்வி, திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் அரசு பள்ளி, கல்லூரி கட்டமைப்பு என பல துறைகளில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.

அதிலும் குறிப்பாக கார்பன் சமநிலை சார்ந்த  சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது 

அதன் ஒரு பகுதியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அடர்வனம், சுவரோவியம் என பல திட்டங்களை ஏற்கனவே நிறைவேற்றியதுடன்  அடுத்தகட்டமாக இன்று 16 – 2 – 2022  அம்பத்தூர் எஸ்டேட் போக்குவரத்து பணிமனையில் பசுமை மற்றும் வண்ணங்கள் தீட்ட  அந்நிறுவனத்தின் துணை பொது மேலாளர் வி,குமார், எக்ஸ்னோரா தலைவர் திரு.செந்தூர் பாரி மற்றும் அம்பத்தூர் எஸ்டேட் பணிமனை மேலாளர் சிவ அரசன் ஆகியோருடன் கள ஆய்வு செய்யப்பட்டது