பசுமைக்குழுவின் நேரடி மாதாந்திர சந்திப்பு மேற்கு முகப்பேர் டால்பின் அகாடமியில் 20-02-2022 மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
பசுமைகுழுவின் ஆயிரம் நாள் பயணத்தில் மீதம் ஓராண்டு உள்ளது.
நாம் இதுவரை பெற்ற அனுபவத்தில் இருந்து மீதம் உள்ள நாட்களில் மேம்படுத்திய களப்பணி நாட்களாக மாற்ற இக்கூடுகை உதவியாக இருந்தது டன் பல்வேறு நம்பிக்கைகளை விதைத்தது.
தன்னார்வலர்களைக்கொண்ட பசுமைகுழு பொறுப்பேற்றல் எனும் சக்தியின் மூலம் ஒருங்கிணைந்து செயலாற்றுகிறது.
இங்கு வயது,செல்வாக்கு,பதவி, கல்வி என அனைத்தும் மறைந்து தன்னலமற்ற பங்களிப்பு,அர்பணிப்பு மற்றும் பூவுலகிற்கான தொண்டு மனப்பான்மை ஆகிய அற்புதங்கள் தினசரி காட்சிபடுகின்றன.
இதுபோன்ற தன்னலமற்ற தொடர் செயற்பாடுகள் பலருக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி நிற்கிறது. இது போன்றும் இக்காலத்தில் நகரங்களில் வாழ்கின்றதா ? என ஆச்சரியம் கொள்கின்றனர்.
சிறுவயது முதலே தன் குடும்பத்தில் தாம் பெற்ற வலிகளால் வளர்ந்த அந்த மங்கை குறிப்பாக கோவிட் காலத்தில் மாநிலம் முழுவதும் உள்ள தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து நோயால் பாதிக்கப்பட்டவருக்கு street lights எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இரவு – பகலாக சேவையாற்றிய பாங்கு அனைவரின் நெஞ்சிலும் ஆழமாய் வாழ்கின்றது என்றால் அது மிகையல்ல.
அறிவால் சாதிக்க முடியாததை அன்பால் சாதிக்க முடியும் என அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழும் இவர் ஜெகதீஸ்வரன் எனும் கட்டிட பொறியாளரை கரம் பிடித்து பொது வாழ்க்கை என்பது இனி இல்லற வாழ்வோடு இனிதே தொடரும் என்று தனித்துவமாய் வாழச்செல்கின்றார்
சமூகத்தில் பல அமைப்புகளோடு இணைந்து செயலாற்றி அவர்தம் இல்லத்திலும்,உள்ளத்திலும் வாழும் இவ்விளம் பெண்ணாளுமை செல்லப்பிள்ளையாக கொண்டாடப்படுகின்றார்.
தன்னலமற்ற பொறுப்பேற்றல் என்று வாழ்வதால் குக்கிராமத்தில் இருந்த இவர் இன்று குன்றின் மீது வைத்து இச்சமூகம் அழகு பார்க்கிறது.நாம் இவரை வாழ்க வளத்துடன் என வாழ்த்தி மகிழ்வோம்🙌🏻
தன்னலமற்ற பொறுப்பேற்றலில் தான் அன்பும், அக்கறையும் மலர்கிறது
சமூகத்தின் அவலங்கள் அனைத்தும் சுயநல பார்வையோடு கடந்து செல்வதால் இன்றும் தொடர்கிறது.
சமூகத்தின் மீதான அன்பினால் மட்டுமே இப்பூவுலக நண்பர்களாக நம்மை இப்பிரபஞ்சம் அங்கீகாரம் செய்து அடையாளம் காட்டுகிறது
🌎உலகம் ஒரே குடும்பம்,
💚உலகம் அனைத்து உயிர்களுக்குமானது,
💓சமூகமாய் இணைந்து இருப்போம்🌴